இப்போ இப்படி? அப்போ ஏன் அங்கீகாரம் கொடுக்கலை? ஜி.வி. பிரகாஷ் கேள்வி

சென்னை:
இப்போ ஹவுஸ்புல் படமாக ஓடுகிறது. ஆனால் அப்போது ஏன் அப்படி நடந்தது என்று ஜி.வி.பிரகாஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் எல்லாம் காலம் கடந்து நல்ல வரவேற்பு பெறும். அப்படியிருக்க கார்த்தி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன்.

இந்த படத்தை இப்போது பல திரையரங்கில் 4 ஷோ போட்டு ஹவுஸ்புல் ஆகியுள்ளது. இதுக்குறித்து இப்படத்துக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ் மிகவும் கோபமாக சில கருத்துக்களை கூறியுள்ளார்.

இதில் ‘இன்று அந்த படத்தை கொண்டாடுகிறீர்கள், ஹவுஸ்புல் கூட ஆகிறது. ஆனால், ரிலிஸான போது எங்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

செல்வா, எனக்கு, ராம்ஜி என ஒருத்தருக்கும் விருது கொடுக்கவில்லை, இப்போது புகழ்ந்து என்ன செய்வது’ என கோபமாக கருத்து தெரிவித்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!