இமைக்கா நொடிகள் படத்தின் டிரெய்லர் வெளியாகி செம டிரெண்ட்

சென்னை:
இமைக்கா நொடிகளின் டிரெய்லர் வெளியாகி செம டிரெண்ட் ஆகி வருகிறது.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாரா சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

டிமாண்டி காலனி படத்தின் வெற்றிக்கு பிறகு அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், அதர்வா – ராஷி கண்ணா ஜோடியாக நடித்துள்ளனர். அத்துடன், பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார்.

ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரில் அனுராக் காஷ்யப் சைகோவாக நடிக்க, அவரை துணிச்சலாக விரட்டும் சிபிஐ அதிகாரியாக நயன்தாரா நடித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!