இயக்குநர் அட்லீ, மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார்

நடிகர் விஜய்யை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களை இயக்கிய இயக்குநர் அட்லீ, மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார். ஏ.ஜி.எஸ்., நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அதனால் விஜய் 63 என்றே அழைத்து வருகின்றனர். ரஹ்மான் இசையமைக்கிறார். நேற்று எளிய முறையில் பூஜையுடன் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இந்தப்படத்தில் விஜய், சி.பி.ஐ., அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவையே உலுக்கும் ஒரு ஊழல் வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது. விசாரணை அதிகாரியாக இருந்து, வழக்கை திறம்பட துப்புத் துலக்கி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது போன்றதொரு கதையம்சம் உள்ள படம் தான் இது என்கிறார்கள்.

Sharing is caring!