இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

இந்து மதம் பற்றி அவதூறு பரப்புவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதாக பாரத் முன்னணி அளித்த முறைப்பாட்டிற்கமைய இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Sharing is caring!