இயக்குனராகிறார் விஷால்

நடிகர் விஷால் செல்லமே படத்தில் அறிமுகமாவதற்கு முன்பு நடிகர் அர்ஜூன் இயக்கிய பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது முன்னணி நடிகராகி விட்ட அவர் அடுத்த ஆண்டு ஒரு படம் இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

விஷால் இயக்கும் படம் நாய் மற்றும் பூனைகள் சம்பந்தப்பட்ட கதையில் ஹாலிவுட் தரத்தில் உருவாகிறதாம். இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்சன்ஸ் வேலைகளில் தற்போது தான் ஈடுபட்டிருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் விஷால்

Sharing is caring!