இயக்குனர் ஆகும் ஆசையில் நடிகை நயன்தாரா

சென்னை:
இயக்குனர் ஆகும் ஆசை நயன்தாராவுக்கு உள்ளது என்று கோலிவுட்டில் பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது.

நயன்­தாரா தமிழ் மட்­டும் அல்­லாது தெலுங்­கி­லும் முன்­னணி
கதா­நா­யகி­யாக விளங்­கு­கி­றார். முதன்மை கதா­பாத்­தி­ரங்­க­ளில் மட்­டும் அல்­லாது பெரிய கதா­நா­ய­கர்­க­ளுக்கு ஜோடி­யா­க­வும் நடித்து
வரு­கி­றார்.

தான் நடிக்­கும் படங்­க­ளின் படப்­பி­டிப்­பு­க­ளில் நயன்­தாரா நடிப்­பில் மட்­டு­மின்றி கேமரா, எடிட்­டிங் ஆகி­ய­வற்­றி­லும் ஆர்­வம் செலுத்தி
வரு­கி­றார். நயன்­தா­ரா­வுக்கு விரை­வில் இயக்­கு­னர் ஆகும் எண்­ண­மும் இருக்­கி­றது என்­கி­றார்­கள்.

2019-ம் ஆண்டு நயன்­தாரா, தான் ஒப்­புக்­கொண்­டுள்ள படங்­களை
எல்­லாம் நடித்து முடித்த பிறகு ஒரு படத்தை இயக்க இருப்­ப­தாக கோலி­வுட்­டில் பேச்சு.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!