இயக்குனர் ஆவதற்கு முன்பு ஹோட்டலில் வேலை பார்த்த எஸ்.ஜே.சூர்யா

சென்னை:
இயக்குனர், நடிகர் என்று பன்முகம் காட்டி வளர்ந்துள்ள எஸ்.ஜே.சூர்யா சினிதுறைக்கு வருவதற்கு முன்பு ஹோட்டலில் வேலை பார்த்துள்ளார்.

இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்த பிறகு நடிகரானவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் சமீபத்தில் வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஸ்பைடர் மற்றும் மெர்சல் படங்களில் அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார்.

அவர் ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் வாய்ப்பு தேடியுள்ளார். லயோலா கல்லூரியில் படித்து முடித்தபிறகு சினிமாவில் வாய்ப்பு கேட்டு அலைந்துள்ளார். அது கிடைக்காததால் ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து, அப்படியே சினிமா வாய்ப்பை தேடியுள்ளார்.

பின்னர்தான் துணை இயக்குனராகி, சில வருடங்கள் கழித்து சொந்தமாக படம் இயக்கும் அளவுக்கு வளர்ந்து, நடிகராகி உள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!