இயக்குனர் சவுமிக் சென்னுக்கு எதிராக பாலியல் புகார்

பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் சவுமிக் சென்னுக்கு எதிராக பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, என, நடிகை ஷ்ரேயா தன்வந்தரி கூறியுள்ளார்.

சமீபகாலமாக, மீ டூ என்ற பெயரில், சமூக வலைதளத்தில், பிரபலங்கள் மீது, பல பெண்கள் புகார் கூறி வருகின்றனர். இது, சினிமா, அரசியல் வட்டாரத்தில் பெரியளவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட் திரையுலகில், பிரபல இயக்குனராக திகழும், சவுமிக் சென் மீது, கடந்தாண்டு, மூன்று பெண்கள் பாலியல் பலாத்கார புகார்களை கூறினர். இதையடுத்து, திரைப்பட பணிகளில் இருந்து, விலகுவதாக, சவுமிக் சென் கூறியிருந்தார்.

இந்நிலையில், சவுமிக் சென் மீதான பாலியல் புகார்கள் குறித்து, பிரபல நடிகை, ஷ்ரேயா தன்வந்தரி கூறியுள்ளதாவது: நான் நடித்த, ஒய் சீட் இந்தியா திரைப்படத்தின் இயக்குனர், சவுமிக் சென்னுக்கு எதிராக, பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சிகரமாக உள்ளது. இந்த விவகாரத்தில், பாலியல் புகார்களை கூறிய பெண்களுக்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். மீ டூ இயக்கத்தை மேலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பசி, ஏழ்மை, வீடு, வேலை இன்றி இருத்தல் போன்றவை பற்றி, எனக்கு தெரியும். இவை அனைத்தையும் அனுபவித்து உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை ஸ்ரேயா தன்வந்தரி, 30, நடித்த, ஒய் சீட் இந்தியா திரைப்படத்தை, இம்ரான் ஹாஷ்மி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம், நாளை மறுதினம் திரைக்கு வருகிறது. இவர், ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

Sharing is caring!