இயக்குனர் பரதனின் அடுத்த படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது

சென்னை:
விஜய் நடித்த பைரவா படத்தை இயக்கிய பரதனின் அடுத்த படம் தமிழ், தெலுங்கில் உருவாக உள்ளது என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விஜய் நடித்த பைரவா படத்தை இயக்கியவர் பரதன். அழகிய தமிழ் மகன் படத்திற்கு பிறகு இணைந்த கூட்டணி இது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

மருத்துவக்கல்லூரியில் நடக்கும் ஊழல் பற்றி இப்படம் பேசியது. இந்த படத்திற்கு பின்னர் பரதன் அண்மையில் அடுத்த கதைக்கான வேலைகளில் இறங்கினார். தற்போது கதை தயாராகிவிட்டதாம்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் நடிக்கப்போவது யார் என்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!