இயக்குனர் பாக்யராஜ் ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்… முருகதாஸ் குற்றச்சாட்டு

சென்னை:
இயக்குனர் பாக்யராஜ் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளார் என்று இயக்குனர் முருகதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சர்கார் படத்தின் கதை பற்றிய சர்ச்சை தான் தற்போது மிகப்பெரிய அளவில் வெடித்துள்ளது. படத்தின் கதையை முழுமையாக படிக்காமல், படத்தையும் பார்க்காமல் ஒருதலைப்பட்சமாக பாக்யராஜ் நடந்துகொண்டுள்ளார் என முருகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

மற்றொரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது;

“விஜய்யின் அனைத்து படங்களுக்கும் ஏதாவது ஒரு சர்ச்சை வருகிறது. அவரின் கடைசி படம் மெர்சலுக்கும் பிரச்சனை வந்தது. அவரின் படத்தை டார்கெட் செய்யத்தான் எதிரிகள் என்னை பற்றி இப்படி சர்ச்சை ஏற்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. ஒரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தவேண்டும் என்றால் வீக்கான கண்ணாடி ஜன்னல் மீது தான் கல் எறிவார்கள். அது போல தான் என்னை டார்கெட் செய்துள்ளனர்,”.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!