இயக்குனர் பாலசந்தர் மனைவி காலமானார்

சென்னை:
உடல்நலக்குறைவால் இயக்குனர் பாலசந்தரின் மனைவி காலமானார்.  இதனால் திரைத்துறை வட்டாரங்கள் சோகத்தில் உள்ளன.

பிரபல திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் மனைவி ராஜம்.  இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவுடன் இருந்துள்ளார்.  இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர் காலமானார்.

இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இயக்குநர் கே.பாலசந்தர் உடல் நல குறைவால் காலமானார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!