இயக்குனர் மீது கோபத்தில் கொந்தளிக்கும் நயன்தாரா

சென்னை:
நேரத்திற்கு காட்சிகளை எடுக்காத இயக்குனர் மீது கோபத்தில் உள்ளாராம் நயன்தாரா.

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் இன்று இந்த உயரத்தில் இருக்கின்றார் என்றால் அதற்கு முக்கிய காரணம் நேரம் தவறாமைதான்.

படப்பிடிப்பிற்கு சொன்ன நேரத்தை விட முன்பே வந்து ரெடியாகி இருப்பாராம், அப்படியிருக்க இவர் சர்ஜன் இயக்கத்தில் ஐரா படப்பிடிப்பில் உள்ளார். இந்த படப்பிடிப்பில் சர்ஜன் நேரத்திற்கு காட்சிகளை எடுப்பது இல்லையாம், திட்டமிட்டப்படி காட்சிகளை எடுக்காததால், நயன்தாரா செம கோபமாகியுள்ளாராம்.

இதனால், ஒரு கட்டத்தில் தயாரிப்புக்குழுவிடமே நயன்தாரா நேரடியாக வருத்தம் தெரிவித்து விட்டாராம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!