இயக்குனர் ராஜமவுலியின் அடுத்த படத்தில் ஜான்வி கதாநாயகி?

ஐதராபாத்:
இயக்குனர் ராஜமவுலியின் அடுத்த படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகுபலி படத்தை இயக்கிய ராஜமௌலி ஒரு பெரிய இடைவெளி எடுத்துக்கொண்டு அடுத்த பட கதையை தயார் செய்து வருகிறார்.
RRR என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் ஹீரோயினாக ஸ்ரீதேவி மகள் ஜான்வியை நடிக்கவைக்க முயற்சிகள் நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஜான்வி நடிப்பில் இந்தியில் வெளிவந்துள்ள தடக் படம் நல்ல வசூல் ஈட்டிவருகிறது.

விரைவில் 50 கோடி வசூலை தொடவுள்ள நிலையில் படக்குழு வெற்றியை கொண்டாடிவருகிறது. ஜான்வி ராஜமௌலியின் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!