இரட்டை வேடங்களில் நடிக்கும் ஆண்ட்ரியா…வீடியோ

நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா, மாளிகை என்கிற படத்தில் போலீஸாகவும், இளவரசியாகவும், இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

பாடகியான ஆண்ட்ரியா, கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர், பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, வட சென்னை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  கவர்ச்சி கன்னியாகவும், இரண்டாம் நாயகியாகவும் நடித்து வந்த ஆண்ட்ரியா, தற்போது தில்சத்யா இயக்கத்தில், பெண் வேடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும், மாளிகை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மாளிகை திரைப்படத்தின் டீஸ‌ரின் மூலம்  ஆண்ட்ரியா போலீஸாகவும், பிளாஷ்பேக்கில் இளவரசியாகவும் நடிக்கிறார் எனத் தெரிகிறது.

Sharing is caring!