‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ இயக்குனர் ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்

சென்னை:
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கபாலி, காலா என தொடர்ந்து ரஜினிகாந்துடன் படம் இயக்கிவந்த பா.ரஞ்சித் தயாரிப்பாளராகி பரியேறும் பெருமாள் என்கிற படத்தை தயாரித்திருந்தார்.

அது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது தன் இரண்டாவது தயாரிப்பை அறிவித்துள்ளார் ரஞ்சித்.

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடிக்கிறார். இப்படத்தை அதியன் ஆதிரை என்பவர் இயக்குகிறார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!