இரவு 2.30 மணி….கண்ணீர் விட்டழுத சமந்தா…?

நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா நடித்துள்ள மஜிலி படம் சமீபத்தில் வெளியாகி அதற்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

இந்த படத்தின் சக்ஸஸ் மீட் இன்று நடைபெற்றது. மொத்த படக்குழுவும் பங்கேற்ற இந்த நிகழ்வில் மேடையில் சமந்தா பேசும்போது ரிலீஸ் ஆண்டு தான் இருந்த மனநிலை பற்றி பேசினார்.

“ரிலீஸ் அன்று நள்ளிரவு 2.30 மணிக்கே எழுந்துவிட்டேன். வீட்டில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தேன். படம் ஹிட்ஆகவேண்டும் என தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். காலையில் நன்கு ஐந்து மணி முதல் படம் பற்றி ட்விட்டரில் பேச்சு ஆரம்பித்தது.” “காலையில் தயாரிப்பாளர் எனக்கு கால் செய்து கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ் பற்றி கூறினார். அதன்பிறகு நான் அரை மணி நேரம் கண்ணீர்விட்டு அழுதேன்.”

“இந்த படம் பிளாப் ஆகியிருந்தால் என்ன சமாதானம் சொல்வது என தெரியாமல் தான் இருந்தேன். வாழ்வா சாவா என்ற சூழ்நிலையில் தான் இருந்தோம்” என சமந்தா பேசியுள்ளார்.

Sharing is caring!