இராஜினாமாவை ஏற்க சங்க உறுப்பினர்கள் மறுப்பு

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை இயக்குநர் கே.பாக்யராஜ் இராஜினாமா செய்த நிலையில், அவரது இராஜினாமாவை ஏற்க சங்க உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் இராஜினாமா செய்தார்.

சர்கார் பட கதை விவகாரத்தால் மிகவும் மனவேதனை அடைந்ததாக பாக்யராஜ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாக்யராஜின் இராஜினாமாவை ஏற்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

பாக்யராஜ் தொடர்ந்து தலைவர் பதவியை வகிக்க வேண்டும் என்று அவரது இராஜினாமாவை சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டதால், பாக்யராஜே தலைவர் பதிவியை ஏற்க வேண்டும் என திரைப்பட எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளர் மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!