‘இருபத்தொன்னாம் நூற்றாண்டு’

கிட்டத்தட்ட அக்னி நட்சத்திரம், நேருக்கு நேர் படங்கள் போல மலையாளத்திலும் ‘இருபத்தொன்னாம் நூற்றாண்டு’ என்கிற படம், இரண்டு முன்னணி நடிகர்களின் வாரிசுகள் நடிப்பில் உருவாகியுள்ளது. மோகன்லாலின் மகன் பிரணவ், தனது இரண்டாவது படமாக நடித்துள்ள இந்த படத்தில், மலையாள சினிமாவின் ஆக்சன் ஹீரோ என சொல்லப்படும் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

பிரணவுக்கு முன்பே கோகுல் சுரேஷ், சினிமாவில் அறிமுகமாகி விட்டாலும் கூட சரியான படங்கள் அமையாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் கோகுலுக்கு, இந்த படம் கைதூக்கிவிடும் என படக்குழுவினர் கூறுகின்றனர். இன்னும் ஒரு ஆச்சர்யமான விஷயமாக 32 வருடங்களுக்கு முன் வெளியான இருபதாம் நூற்றாண்டு என்கிற படத்தில் மோகன்லாலும் சுரேஷ் கோபியும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திலீப் நடித்த ராம்லீலா படத்தை இயக்கிய அருண்கோபி என்பவர் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். வரும் ஜனவரி 26ம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது

Sharing is caring!