இரு மடங்கு லாபம்

தெலுங்குத் திரையுலகத்தில் பொங்கல் போட்டியில், பாலகிருஷ்ணா, ராம் சரண், ரஜினிகாந்த் ஆகியோரில் ஒருவர் தான் வெற்றிக்கொடி நாட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாருமே எதிர்பார்க்காமல் வெங்கடேஷ், தன்னை மீண்டும் விக்டரி வெங்கடேஷ் என நிரூபிக்க வைத்திருக்கிறார்.

பாலகிருஷ்ணா நடித்த ‘என்டிஆர் கதாநாயகடு’, ராம் சரண் நடித்த ‘வினய விதேய ராமா’ ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ ஆகிய படங்களைக் காட்டிலும் வெங்கடேஷ், வருண் தேஜ் நடித்து வெளிவந்த ‘எப் 2’ படம் இரு மடங்கு லாபத்தைத் தர உள்ளது. மற்ற படங்கள் தோல்வியைத் தழுவி நஷ்டத்தைத் தர ‘எப் 2’ படம் இப்படி லாபத்தைக் கொடுத்து ஆச்சரியப்பட வைத்துள்ளது.

உலக உரிமையாக சுமார் 32 கோடிக்கு விற்கப்பட்ட இந்தப் படம் இதுவரையிலுமே 60 கோடி பங்குத் தொகையைக் கொடுத்துள்ளதாம். படத்தை வாங்கிய அனைவருக்குமே லாபமாம். எதிர்பார்த்த படங்கள் ஏமாற்ற, எதிர்பாரா படம் லாபத்தைத் தர இதுதான் சினிமா என மீண்டும் நிரூபிக்க வைத்திருக்கிறது எப் 2.

அடுத்து தமிழ் ரீமேக் உரிமை, ஹிந்தி ரீமேக் உரிமை என கூடுதல் வருமானத்தையும் இந்தப் படம் பார்க்கும். காமெடி படமான இந்தப் படம் எந்த மொழியிலும் நிச்சயம் வெற்றியைப் பெறும்.

Sharing is caring!