இறுதிக்கட்டத்தில் இருக்கிறேன்… இந்தி நடிகை நபீசா அலி தகவல்

மும்பை:
இறுதிக்கட்டத்தில் இருக்கிறேன்… என் வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறேன் என்று இந்தி நடிகை நபீசா அலி தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகை நபீசா அலி. புற்றுநோயால் பாதிப்பில் இருக்கும் இவர் இறுதி ஸ்டேஜில் உள்ளாராம். இதனை அவரே தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார்.

அதோடு தன்னை  சோனியா காந்தி; வந்து சந்தித்துள்ளதையும் தெரிவித்துள்ளார்.

அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் விரைவில் அவர் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

61 வயதான இந்த நடிகை மட்டுமில்லாது சோனாலி, இர்பான் கான் ஆகியோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!