இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான ரொனி லீச் காலமானார்

இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான ரொனி லீச் (Ronnie Leach) தனது 65 ஆவது வயதில் காலமானார்.

இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரத்திற்கு சென்றிருந்தபோதே, மாரடைப்பினால் அவர் காலமானதாக பாடகர்கள் சங்கத்தின் தலைவர் கீர்த்தி பெஸ்குவெல் குறிப்பிட்டுள்ளார்.

ரொனி லீச் 350 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளதோடு, இதுவரை 18 திரைப்படங்களில் நடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!