இலங்கையில் இருந்த சென்று சினிமாவில் சாதித்த ஈழத்தமிழர்

ஈழத் தமிழரான பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு இன்று சினிமாவில் சாதித்து வருகின்றார்.

இந்நிலையில் அவர் கடந்து வந்த சோகமான வாழ்க்கை தொடர்பில் நேர்காணல் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.

நடிகர் போண்டா மணியின் தந்தை இலங்கையில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். அவரின் குடும்பத்தில் மொத்தம் 16 பிள்ளைகள்.

அதில், ஒருவர் குண்டடி பட்டு உயிரிழந்துள்ளார். அது மாத்திரம் இல்லை, நடிகர் போண்டா மணியின் இடது காலிலும் குண்டு துளைத்துள்ளது.

இவ்வாரான சூழலில் சிங்கப்பூர் சென்று அங்குள்ள கடையில் ஆரம்பத்தில் வேலை செய்துள்ளார். பின்னர், நடிப்பு மீது கொண்ட ஆர்வத்தினால் பிரபல இயக்குனர் பாக்யராஜை சந்தித்து சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது வாய்ப்பு கேட்டுள்ளார்.

எனினும், சினிமாவில் நடிப்பது எளிது கிடையாது, சென்னை வந்துவிடு என்று போண்டா மணியிடம் கூறியுள்ளார்.

பின்னர் தமிழகத்துக்கு சென்று மீண்டும் பாக்யராஜை சந்தித்து பேசியுள்ளார். இலங்கையில் இருந்து வந்த கதையை கூறியுள்ளார்.

பின்னர் படத்தில் நடிக்க பாக்யராஜ் வாய்ப்பு கொடுத்துள்ளார். இதையடுத்து பட வாய்ப்பு தேடி கொண்டே சென்னையில் பாதுகாவளராகவும் வேலை பார்த்துள்ளார்.

பின்னர் வடிவேலுடன் அதிக படத்தில் அவர் நடித்துள்ளார். இதேவேளை, இதுவரை அவருக்கு எந்தவிதமான குடியிருப்புச் சான்றோ, வாக்காளர் அட்டையோ, வீடோ கிடைக்கவில்லை என்றும் கவலையுடன் கூறியுள்ளார்.

மேலும், சொந்த உழைப்பில் உயர்ந்து இன்று மாதவி என்ற மாற்றுத்திறனாளி மனைவியுடனும், இரண்டு பிள்ளைகளுடனும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!