இலங்கையில் மெர்சல் வசூலை மிஞ்சுமா 2.0 படம்!

சென்னை:
இலங்கையில் மெர்சல் படத்தின் வசூலை 2.0 படம் முந்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வரும் படம் 2.0. இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழகம், கேரளா, வட இந்தியா தாண்டி உலகம் முழுவதும் பல இடங்களில் இப்படம் கோடிகளில் வசூல் வருகின்றது. இதில் இலங்கையிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இலங்கையில் இப்படம் LKR 7.22 Crs வசூல் செய்துள்ளது.

இது இந்திய மதிப்பில் ரூ 2.86 கோடி என கூறப்படுகின்றது, மெர்சல் இலங்கை மதிப்பில் ரூ.10 கோடி வசூல் செய்திருந்தது, இதை 2.0 முந்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!