இலவச திட்டங்களை விமர்சனம் செய்த இயக்குனர் முருகதாஸ் மீது வழக்குப்பதிவு

சென்னை:
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது… இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னையில் 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்ததற்காக, மன்னிப்பு கேட்க இயக்குனர் முருகதாஸ் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் கொடுத்த புகார் மனுவின் கீழ் முருகதாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!