இல்ல… நடிக்கலை… படத்தின் டிஸ்கஷனுக்காக சந்தித்தாராம்

சென்னை:
இல்ல… இல்ல… அது வதந்தி… பார்க்க போனது வேற விஷயத்திற்காக என்று தெரிய வந்துள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

இயக்குனர் ராஜமௌலி பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது அடுத்த படத்தின் பணிகளில் பிஸியாக உள்ளார். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ள இந்த படத்தின் முதல் கட்டப்பணிகள் தற்போது நடந்து வருகிறது.

சமீபத்தில் நடிகர் சசிகுமார் சமூக வலைத்தளத்தில் ராஜமௌலியை சந்தித்தபோது எடுத்த போட்டோவை வெளியிட்டார். அதனால் அவர் ராஜமௌலியின் அடுத்த படத்தில் நடிக்கலாம் என தகவல் பரவியது.

ஆனால் அது உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது. சசிகுமார் தான் இயக்கவுள்ள வரலாற்று படத்தின் டிஸ்கஷனுக்காக தான் ராஜமௌலியை நேரில் சென்று சந்தித்தாராம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!