இல்ல… வதந்திதான் அது… மறுப்பு தெரிவித்த நடிகர் விஷ்ணு

சென்னை:
இல்ல… இல்ல… நட்பு மட்டும்தான் என்று தன்னை பற்றிய வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகர் விஷ்ணு.

விஷ்ணு தமிழ் சினிமாவின் வளரும் நட்சத்திரம். இவர் தன் மனைவி ரஜினியை சமீபத்தில் தான் விவாகரத்து செய்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தான் கொடுத்தது.

இந்நிலையில் விஷ்ணு ராட்சசன் படத்தில் அமலா பாலுடன் இணைந்து நடித்ததால், இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக ஒரு செய்தி பரவியது.

இதை முற்றிலுமாக விஷ்ணு மறுத்துள்ளார், விவாகரத்து ஆன நேரம் இந்த படம் வந்ததால், எல்லோரும் இப்படி பேச தொடங்கிவிட்டனர்.
நட்பு என்பதை தவிர அவருக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லை  என்று மறுப்பு தெரிவித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!