இளம் நடிகர்களில் எவரும் இந்த விவகாரம் குறித்து வாய் திறப்பதே இல்லை.

சமீபகாலமாக மலையாள நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கும் விதமாக முடிவு எடுக்கப்பதை தொடர்ந்து நடிகர் சங்கத்தில் இருந்து சில நடிகைகள் ராஜினாமா, அறிக்கைகள் என புயல் வீசி வருகிறது. கவனித்து பார்த்தால், நடிக்க வாய்ப்பு இல்லாத சிலர் தான் இந்த பிரச்னையை ஊத்தி பெரிதாக்கி வருகின்றனர்.. இளம் நடிகர்களில் எவரும் இந்த விவகாரம் குறித்து வாய் திறப்பதே இல்லை.

இதுகுறித்து சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மானிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் எப்போதுமே ஒரு பக்கம் சார்பாக பேசுபவன் அல்ல. அப்படி நடந்து கொண்டால் இன்னொரு தரப்புக்கு சங்கடம் ஏற்படும். அதை நான் விரும்பவில்லை. என் தந்தை (மம்முட்டி) கூட யாரையும் காயப்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் நடந்து கொள்பவரல் ” என கூறிய துல்கர், கசபா பட விவகாரம் தொடர்பாக பார்வதி கூறியவற்றை மம்முட்டி பொருட்படுத்தாதையும் சுட்டிக்காட்டினார்.

Sharing is caring!