இளைஞர்களின் எழுச்சியே உறியடி 2

சூர்யாவின் 2டி தயாரிப்பில் உருவாகும் உறியடி-2 ,  திரைப்படத்தை விஜயகுமார் இயக்கி நடித்துள்ளார்.  கோவிந்த் வசந்த் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே  பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், உறியடி-2 படம்  இந்த ஆண்டு மே 17ல் திரைக்கு வர உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உறியடி-2  டீஸரை, இந்த‌படத்தின் தயாரிப்பாளர் சூர்யா ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அனல் பரக்கும் போரட்டங்களுடன், இளைஞர்களின்  எழுச்சியை சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ள இந்த படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Sharing is caring!