இளைஞர்களுக்கும் திரையரங்க ஊழியர்களுக்கும் இடையில் கருத்து மோதல்

யாழில் உள்ள திரையரங்கில் அதிக விலைக்கு நுழைவு சீட்டு விற்றமை தொடர்பில் இளைஞர்களுக்கும் திரையரங்க ஊழியர்களுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதால் திரையரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் திரைக்கு வந்த சர்கார் திரைப்படம் யாழில். உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளன.

இந்  நிலையில் யாழ்.வடமராட்சி பகுதியில் உள்ள திரையரங்கிலும் சர்கார் திரையிடப்பட்டது. அதன் போது குறித்த திரையரங்கில் 500 ரூபாய்க்கான நுழைவு சீட்டை 700 ரூபாய்க்கு திரையரங்க ஊழியர்கள் விற்பனை செய்துள்ளார்கள்.அதனால் அங்கு படம் பார்க்க சென்ற இளைஞர்கள் அதிகூடிய விலைக்கு நுழைவு சீட்டு விற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன் போது இந்த விலைக்கு தான் விற்போம் என ஊழியர்கள் கூறியதால் இளைஞர்கள் வாய்தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டு படம் பார்க்காது திரும்பி சென்றனர்.அதேவேளை பலர் அதிக விலை என்றாலும் பரவாயில்லை என படம் பார்க்க நுழைவு சீட்டை பெற்றுக்கொண்டனர்.

Sharing is caring!