இளையராஜாவிற்கும் தம்பி கங்கை அமரனுக்குமிடையே அவ்வப்போது கருத்து மோதல்

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும், அவரது தம்பி கங்கை அமரனுக்குமிடையே அவ்வப்போது கருத்து மோதல் நடந்து வருவது வாடிக்கையான ஒன்றுதான். ராயல்டி விஷயத்தில் கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு எதிராக கருத்து சொன்னார்.

இந்நிலையில், சென்னை ராணி மேரி கல்லூரி கலை விழாவில் கலந்து கொண்ட இளையராஜா பேசும்போது, இன்றைய இசையமைப்பாளர்கள் இசையமைப்பாளர்களே அல்ல. பல சி.டிக்களை வைத்துக்கொண்டு அதே மாதிரி போடுவார்கள் என்றார். இந்த கருத்து இளையதலைமுறை இசையமைப்பாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுப்பற்றி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள கங்கமை அமரன், இளையராஜாவின் கருத்தை மேற்கோள் காட்டி, மன்னிக்கவும் நானெல்லாம் மறுபடியும் இசையமைக்கவே வர முடியாது என பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!