இளையராஜாவை சும்மா புகழ்வதில் உடன்பாடில்லை… மிஷ்கின் சொல்றார்

சென்னை:
இளையராஜாவை சும்மா புகழ்வதில் எனக்கு உடன்பாடில்லை. அவரை புகழ்ந்தவர்களே விட்டு சென்றவர்கள் தானே என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்தினார் விஷால். இந்த விழாவில் ரகுமான், மணிரத்னம், ஷங்கர், ரஜினிகாந்த், கமல் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

ஆனால், இளையராஜாவின் தீவிர ரசிகர் மிஷ்கின் செல்லாதது எல்லோருக்கும் அதிர்ச்சி தான். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் எப்போதும் அவருடன் மட்டும் தான் பணிபுரிவேன், அவரை சும்மா புகழ்வதில் எனக்கு உடன்பாடில்லை.

அவரை புகழ்ந்தவர்களே விட்டு சென்றவர்கள் தானே என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!