இளையராஜா நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி ஓய்வூதியத்திற்காம்!!!

சென்னை:
இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதில் கிடைக்கும் பணத்தை நலிந்த மூத்த தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக கொடுக்க உள்ளனராம்.

இசைஞானி இளையராஜா 1000 படங்களை கடந்து இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக இசை நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.

இதனை வரும் பிப்ரவரி 2, 3 தேதிகளில் தயாரிப்பாளர் சங்கம் நடத்துகிறது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள ரஜினி, கமல், விக்ரம், விஜய்காந்த், ஜெயம் ரவி, ஹன்சிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் நேரில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

நிகழ்ச்சியின் மூலம் ரூ.10 கோடி பணத்தை திரட்டி, அதனை தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான நலிந்த மூத்த தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியமாக கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!