இழக்க மாட்டேன்… ரஜினி பட வாய்ப்பை… யோகி பாபு சொல்றார்

சென்னை:
ரஜினி பட வாய்ப்பை இழந்து விட மாட்டேன் என்று காமெடி நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் யோகிபாபு நடிப்பது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு யோகிபாபுவுக்கு கிடைத்துள்ளது. இதுபற்றி யோகிபாபு அளித்துள்ள பேட்டியில், ‘பேட்ட’ படத்திலேயே ரஜினி சார்கூட நடிக்க வேண்டியது. அவர்கூடவே வரும் வேடம் தான்.

வேற படங்களில் நடித்ததால் அந்த வாய்ப்பு கை நழுவி போய்விட்டது.
வருத்தமாக சுற்றிக்கொண்டு இருந்தேன். இப்போது இந்த வாய்ப்பு, அந்த வருத்தத்தை போக்கி விட்டது. ‘சர்கார்’ படப்பிடிப்பில் ‘அடுத்து ஒரு நல்ல செய்தி இருக்கு. நாம் பண்ணுவோம்’ என்று முருகதாஸ் சார் சொன்னார்.

அந்த நல்ல செய்தி, ரஜினி சார் படம்னு தெரிந்தபோது அவ்வளவு சந்தோ‌ஷம். படப்பிடிப்பு தேதிகள் திட்டமிட்டு வருகிறார்கள். இந்த முறை வாய்ப்பை இழந்துவிடமாட்டேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!