இவராக… இவராக மாற ஆசை… ஜான்வி கொடுத்த ஷாக்

மும்பை:
இவராக… இவராக மாற ஆசை என்று மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தெரிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார். என்ன விஷயம் தெரியுங்களா?

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அவர் எப்போது தென்னிந்திய படங்களில் நடிப்பார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் ஜான்வி தன் அண்ணன் அர்ஜூனுடன் கலந்துகொண்டார். அப்போது ஜான்வியிடம் “நீ ஒருநாள் தூங்கி எழும்போது ஒரு ஆண் நடிகராக இருந்தால்.. அது எந்த நடிகராக இருக்க வேண்டும் என ஆசை” என கற்பனையான கேள்வியை கரண் ஜோகர் கேட்டார்.

அதற்கு சற்றும் தாமதிக்காமல் “விஜய் தேவரகொண்டா” என்று தெலுங்கு நடிகர் பெயரை கூறியுள்ளார். அவர் ஏதாவது பாலிவுட், ஹாலிவுட் ஹீரோ பெயரை சொல்வார் என எதிர்பார்த்தவர்களுக்கு இந்த பதில் ஷாக்தான்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!