ஈழத்தமிழர்களை நெகிழ்ச்சியுற வைத்த கனடா வாழ் ஈழத்து சிறுமி

தாய் மண்ணை முத்தமிட வேண்டும் என்று ஈழத் தமிழர்களின் வலி சுமந்த பாடலை பாடி அனைவரையும் பாடகி சின்மயி கண்ணீர் சிந்த வைத்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் ஞாயிற்று கிழமை ஒளிப்பரப்பப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இலங்கை சென்றது குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் கூறும் போது,

எனக்கு இலங்கை சென்று வந்த பின்னர் அதிக புலம் பெயர் தமிழர்கள் சமூகவலைத்தளங்கள் வாயிலாக தொடர்பு கொண்டனர்.

தாய் நாட்டை பார்ப்பதற்கு எங்களுக்கு கிடைக்காத அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைத்துள்ளது, இதற்கு வாழ்த்துக்கள். தாய் நாட்டுக்கு செல்ல முடியாது பல தமிழர்கள் சோகத்தில் உள்ளார்கள் என்றும் கவலையுடன் கூறியுள்ளார்.

இதேவேளை, தாய் நாட்டை பிரிந்த அனைத்து ஈழத்து உறவுகளுக்கும் இந்த பாடலை சமர்ப்பணம் செய்வதாகவும் சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாடலை பாடி முடிந்ததும் நடுவர்கள் முதல் பார்வையாளர்கள் வரை அனைவரும் சோகத்தில் மூழ்கி விட்டனர். இந்த பாடலை எழுதிய எழுத்தாளருக்கும் நடுவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“தாய் மண்ணை முத்தமிட வேண்டும்
தமிழ் மண்ணை சுற்றி வர வேண்டும்
தாய்நாட்டைப் பிரிந்து வாழ்கின்ற எமக்கு
நெருப்பாய் நினைவுகள் சுடுகின்றது..”

என்ற சோகங்களை சுமந்த பாடலை ஈழத்தமிழர்களுக்காக பாடியது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஒரு புறம் கொடுத்திருந்தாலும், பாடல்வரிகள் அனைத்தும் அனைவரையும் ஒரு நிமிடம் சோகத்தில் கதற வைத்துள்ளது.

அது மாத்திரம் இன்றி ஈழத் தமிழர்களின் வேதனையையும் கண்முன் திரையிட்டு காட்டியுள்ளது.

Sharing is caring!