உங்க பஞ்சாயத்தே இப்பிடியா கமல் சார்?

எப்போதும் போல பிரோமோவை பார்த்து நேற்றும் ஏமாற்றம் அடைந்து இருப்பீர்கள். அதிலும் நேற்று கமல் நடத்திய பஞ்சாயத்து பெரும் ஏமாற்றமாக அமைந்தது. ரௌத்திரம் படத்தில் சத்யனும் அவரது நண்பர்களும் ஜீவாவிடம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அப்போது “ஏரியாவில் ஏதாவது பிரச்னை என்றால் நானும் என் நண்பர்களும் விரைந்து சென்று ஹார்ஷா திட்டிவிட்டு வருவோம்” என்று கூறுவார்கள். அவர்களாவது திட்டிவிட்டு வருவார்கள். ஆனால் கமல் பேச்சில் கொஞ்சமும் கடுமை இல்லை.

கண்டிக்க கூடிய செயல்கள் பலவற்றை சென்ற வாரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் செய்திருந்தனர். ஆனால் கமல் முழு நிகழ்ச்சியையும் பார்க்காதவர் போல நடந்து கொள்கிறார். ஒரு வேளை அது உண்மையாக கூட இருக்கலாம்.

நிகழ்ச்சிக்கான முன்னுரையை கொடுத்துவிட்டு சென்ற வாரத்திற்கான ரீகேப்பை கமல் காட்டினார். பின்னர் அகம் டிவி வழியாக போட்டியாளர்களை சந்தித்தார். தொடக்கத்தில் போட்டியாளர்கள் பொம்மை செய்த விதத்தைபாராட்டினார். பின் இந்த வாரம் நாமினேஷனில் ‘குத்தி காட்டிவிட்டீர்கள் போல’,  நாமினேஷன் காரணங்கள் சரிதானா என்று கேட்டார்.

அதற்கு நாமினேட் செய்யப்பட்டவர்கள் பதில் அளித்தனர். முதலில் மகத் தான் தன்னை தைக்க விடவில்லை என்று கூறிய சென்றாயன். கமல் முன் அந்த பழியை மும்தாஜ் மீது போட்டார். பின்னர் மைக் சரியில்லை என்று கூறிவிட்டு போட்டியாளர்களுக்கு கொஞ்சம் கேப் கொடுத்தார் கமல். அது ஒரு நாடகம் தான்.

இது போட்டியாளர்களுக்கு உண்மையில் தெரிந்ததா என்பது தெரியவில்லை. அந்த கேப்பில் மகத்தும், ஐஸ்வர்யாவும் ஏகத்துக்கும் கத்த தொடங்கினர். அவர் மும்தாஜ் மீது அடுக்கடுக்கான குற்றங்களை கூறினர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களின் கோபம் இருந்தது. இதில் மகத் தேவையற்ற வார்த்தைகளை வீசினார். இதை அமைதியாக எதிர்க்கொண்டார் மும்தாஜ். மற்றவர்கள் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் எந்த பயனும் இல்லை. மும்தாஜ் அன்பு செலுத்தி ஏமாற்றுகிறார் என்பதையே அவர்கள் இருவரும் கூறிகொண்டே இருந்தனர். மும்தாஜ் அருகே யாஷிகா அமர்ந்துகொண்டது இன்னும் பெரிய பிரச்னையானது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில்  யாஷிகா ‘பிஷ் ஆஃப்’ என்றார்.

அதற்குள் கமல் மீண்டும் அகம் டிவி வழியாக போட்டியாளர்களிடம் பேசினார். சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா இதே வார்த்தையை சொன்ன போது கமல் கண்டித்தார். ஆனால் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் அதனைப்பற்றி பேசவேஇல்லை.

நடந்தது எல்லாம் பார்க்காதவர் போல நிகழ்ச்சியை தொடங்கினார். எதுல விட்டோம் என்று கேட்டு பேச தொடங்கினார். பின்னர் ரித்விகாவிடம் நாமினேஷன் பற்றி கேட்டார். அப்போது ரித்விகாவை தவறாக நாமினேட் செய்துவிட்டேன். அதுபோல செய்திருக்க கூடாது என்று ஐஸ்வர்யா கூறினார்.

பின்னர் யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வேண்டும் என்று கமல் கேட்டதற்கு அனைவரும் கைத்தூக்கினர். பின்னர் 5 நிமிடம் கேட்டை திறக்கிறோம். யாருக்கு வெளியே வர வேண்டும் அவர்கள் வெளியே செல்லலாம் என்று கமல் கூறினார். அப்போது ஐஸ்வர்யா, பாலாஜி ஆகியோர் வெளியே செல்ல முடிவு செய்தனர். பின்னர், அவர்களை சமாதானப்படுத்த அந்த முடிவில் இருந்து பின்வாங்கினர்.

5 நமிடங்களுக்கு பிறகு மீண்டும் வந்த கமல், யாருமே போலையா? என்றார். பின் மகத் மற்ற போட்டியாளர்களை தாக்கியது குறித்து பேசினார் கமல். அப்போதும் பெரிதாக அவர்  கண்டனம் தெரிவித்தது போல தெரியவில்லை.

ஐஸ்வர்யாவின் கோபத்தை நான் பார்த்ததே இல்லை என்று அவரை யே அப்படி நடித்து காட்ட கூறினார் கமல். ஐஸ்வர்யா  செய்ததில் கொஞ்சமும் ஐஸ்வர்யா தனம் இல்ல. பின்னர் அவரை போல மும்தாஜ் செய்தார். கச்சிதமாக இருந்தது.

ஒவ்வொரு முறை கமல் எதை பற்றி கேள்வி கேட்டாலும், ஐஸ்வர்யாவும் மகத்தும் மும்தாஜ் மீதான குற்றங்களையே பதிலாக கூறிக்கொண்டு இருந்தனர். மும்தாஜ் பிரார்த்தனை செய்ததைபற்றி அவர்கள் கூறிய கருத்து மிகுந்த கண்டத்திற்கு உரியது. அதனையும் கமல் சரியாக கையாளவில்லை. இது என் நம்பிக்கை; மற்றவர்களை தரக்குறைவாக பேசுகிறவர்கள் தான் அதை நினைத்து பயப்பட வேண்டும் என்று சரியான பதிலை கூறினார் மும்தாஜ்

தொடர்ந்து வீட்டில் பேய் இருக்கிறது போன்ற குழந்தைதனமான பேச்சை தொடங்கினர் மகத்தும் ஐஸ்வர்யாவும். அதெல்லாம் உண்மையில் எரிச்சலூட்டின.

பின் ரித்விகா எவிக்‌ஷனில் இருந்து தப்பித்து விட்டதை கமல் அறிவித்தார். வழக்கமாக கமலுடன் பேசும் போது அமர்ந்திருக்கும் சோபாவில் அமராமல், வேறு இடத்தில் போட்டியாளர்கள் அமர்ந்திருந்தனர்.

ஒருவர் எழுந்து நிற்க மற்றவர்கள் அவர் பற்றி கூற வேண்டும். எத்தனை முறை தான் இப்படி செய்வீர்கள் என்று கேட்க தோன்றியது. இதில் மும்தாஜ் முதலில் எழுந்தார். அவரை பற்றி கூறினார்கள். அதில் ரித்விகாவின் பதில் சரியாக இருந்தது போல தோன்றியது. அவர்,”மும்தாஜ் எந்த திட்டமும் இல்லாமல் தான் விளையாடுகிறார். அவர் அன்பு காட்டி ஏமாற்றுவதாக பலர் கூறுகின்றனர். அன்புக்காக அவரிடம் அதிகம் ஈஷிக்கொள்ள வேண்டாம். அன்பு செலுத்துவது அவர் இயல்பாக கூட இருக்கலாம். அவர் உண்மையாக இருப்பது போல தான் உள்ளது என்றார்.

பின்னர் சென்றாயன், ஐஸ்வர்யா ஆகியோர் வந்தனர். இவர்கள்பற்றி போட்டியாளர்கள் ஒரே மாதிரியான கருத்தை கூறினார். மீதி பேர் பற்றி நாளை பார்ககலாம் என்று கூறிவிட்டு சென்றார் கமல்.

இன்றும் இதே போல கமல் தாலாட்டு பாடினால்… ஒன்னும் சொல்வதற்கு இல்லை. சென்ற சீசனில் பார்த்த நடிகர் கமலுக்கும், இந்த சீசனில் பார்க்கும் அரசியல் வாதி கமலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்பதை மட்டும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Sharing is caring!