உடலில் தீ வைத்துக் கொண்டு விழாவை கலக்கிய அக்சய் குமார்

மும்பை:
விழா ஒன்றில் உடலில் தீ வைத்துக் கொண்டு நடிகர் அக்சய் குமார் நடந்து வந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பாலிவுட் நடிகர் அக்சய் குமார் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தவர். அந்த படத்திற்கு பிறகு தமிழிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் ஒரு விழா மேடையில் உடலில் தீ வைத்துக்கொண்டு நடந்து வந்தது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அமேசான் ப்ரைம்காக “தி எண்டு” என்கிற வெப் சீரிஸில் அக்சய் குமார் நடிக்கிறார். அதற்கான அறிமுக விழாவில் தான் இவர் இப்படி செய்துள்ளார். இந்த புகைப்படங்களை அவரே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!