உடல் நலக்குறைவு… இந்தி நடிகர் திலீப்குமாருக்கு தீவிர சிகிச்சை

மும்பை:
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இந்தி பிரபல நடிகர் திலீப் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் திலீப் குமார் (95). இவருக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் மனைவி சாயிரா பானுவுடன் வசித்து வருகிறார்.

வயோதிகம் காரணமாக, திலீப்குமாரின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசடைந்ததையடுத்து மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!