உடல் நலக்குறைவு… மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரா மணிரத்னம்?

சென்னை:
உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் இயக்குனர் மணிரத்னம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.

பிரபல இயக்குனர் மணிரத்னம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வந்த படம் ‘காற்று வெளியிடை’.

தற்போது ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் மணிரத்னம் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் உலா வந்தன. தொடர்ந்து எப்போதும் நடக்டகும் உடல் பரிசோதனைக்காக தான் மருத்துவமனைக்கு சென்றார் என்று மணிரத்னம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!