உண்மைதான்… நான் சொன்னது உண்மைதான்… நடிகை ஸ்ரீரெட்டி சொல்றார்

ஐதராபாத்:
உண்மைதான்… உண்மைதான்… என்று மீண்டும் அதிரடித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. இதனால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு உருவாகி உள்ளது.

ராகவாலாரன்ஸ், ஸ்ரீகாந்த், மற்றும் முருகதாஸ் ஆகியோர் என்னை ஏமாற்றியது உண்மைதான் என்று நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

தம்மை விலைமாது எனக் கூறிய வாராகி மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தெலுங்கு திரைப்பட நடிகை ஸ்ரீரெட்டி புகார் செய்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வீண் விளம்பரத்திற்காக வாராகி ஊடகங்களில் தவறாகப் பேசுகிறார். என்னை மிரட்டும் வகையில் பேசிய அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்துள்ளேன்.

நான் விலைமாது அல்ல. நான் பணம் வாங்கியதை வாராகி பார்த்தாரா? அல்லது அவர் பணம் பெற்றுத் தந்தாரா? சினிமா துறையில் என்னைப் போல் வேறு யாரும் ஏமாறக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் ஏமாற்றப்பட்ட தகவலை வெளியிட்டு வருகிறேன்.

ராகவாலாரன்ஸ், ஸ்ரீகாந்த் மற்றும் முருகதாஸ் ஆகியோர் என்னை ஏமாற்றினர். இவ்வாறு அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!