உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டது

விஜய் நடித்த சர்கார் படம் கடந்த தீபாவளி அன்று வெளிவந்தது. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் அரசின் நலத் திட்டங்கள் பற்றி அவதூறான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என்பதால் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் முருகதாசை கைது செய்ய இடைக்கால தடைவிதித்தது.

Sharing is caring!