உயர்ந்துவிட்டார் லாரன்ஸ்….கேரளாவுக்கு 1 கோடி வழங்குகிறார்.

கேரள வெள்ள நிவாரண நிதியாக நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கேரளாவில் வரலாறு காணாத மழையால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். வெள்ளத்தால் கடும் பாதிப்பை அடைந்துள்ள கேரளாவுக்கு உலக நாடுகள், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிவாரண உதவிகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. மேலும், சமூக ஆர்வலர்கள், அரசு ஊழியர்கள், என தனிப்பட்ட பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அதேபோன்று நடிகர் விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்களும் நிதியுதவி அளித்துள்ள நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். அதிகபட்சமாக நடிகர் விஜய் ரூ.70 லட்சம், விக்ரம் ரூ.35 லட்சம் அளித்திருந்தனர்.

அதேபோன்று நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த், ‘தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அனைத்து மாவட்ட கழகங்கள் சார்பில் கேரள மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்’ என அறிவித்திருந்தார்.

Sharing is caring!