உறியடி இரண்டாம் பாகம் தயாரிக்க சூர்யா முடிவு

செம சூர்யா… செம என்று கோலிவுட் வட்டாரங்கள் பாராட்டுகின்றன. எதற்காக தெரியுங்களா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் பசங்க 2 போன்ற தரமான சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறார். கடைக்குட்டிசிங்கம் படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் தற்போது உறியடி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கவுள்ளார்.

வெளிவந்து மக்களிடம் பிரபலமாவதற்குள் திரையரங்கிலிருந்து தூக்கப்பட்ட படம்தான் உறியடி. ஜாதி பிரச்னையை மிக அழகாக காட்டியிருந்த இப்படம் இணையத்தில் தான் அதிகம் பிரபலமானது.
அடுத்தப்படத்திற்காக காத்திருந்த இப்படத்தின் இயக்குனர் விஜயகுமாருக்கு சூர்யாவின் இந்த முடிவு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.

Sharing is caring!