உறியடி-2 படத்தின் பாடல் வெளியீடு

சூர்யா தயாரிக்கும்  உறியடி 2 படத்தின்  வா வா பெண்ணே  பாடல் உருவான விதம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகுமாரின் உறியடி படம் 2016ல் திரைக்கு வந்தது. இந்த படத்தை விஜயகுமார் இயக்கி, தயாரித்து தானே நடித்திருந்தார். உறியடி படத்திற்கு  பிறகு உறியடி2 படத்தை உருவாக்க வேண்டும் என படக்குழு முடிவு செய்தது. இதன்படி சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனத்தின்  மூலம் உறியடி2 படம் உருவாகி வருகிறது. இந்த படம் அரசியல் சார்ந்த த்ரில்லர்  படமாகும்.மேலும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் ஜனவரியில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் வா வா பெண்ணே பாடல் உருவான விதம் குறித்த வீடியோ ஒன்றை  இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் சித்ஸ்ரீராம் குரலில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவாகியுள்ளது.

Sharing is caring!