உறுதி… உறுதி… நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்னை:
உறுதியாகிடுச்சு… நயன்தாராவின் ஐரா படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகிடுச்சு.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றி அனைவரும் அறிந்ததுதான். தற்போது நயன்தாரா நடித்துள்ள ‘ஐரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 28 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடித்த Mr.லோக்கல் திரைப்படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறையாக இரண்டு வேடங்களில் நயன்தாரா நடித்துள்ள ‘ஐரா’ படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சத்யராஜ், வரலட்சுமி நடித்த ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கொலையுதிர்க்கலம், ‘சயிர நரசிம்ம ரெட்டி, தளபதி 63 மற்றும் லவ் ஆக்சன் டிராமா ஆகிய படங்கள் வெளியாகவிருப்பதால் இந்த ஆண்டு நயன்தாரா நடித்த ஏழு படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!