உலகம் நம்மை உத்து பாக்கணும்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவும் வெளியாகியிருக்கிறது. மஹத் வீட்டை விட்டு வெளியேறியப் பிறகு. யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் தனித்து விடப் பட்டிருக்கிறார்கள். ஹவுஸ்மேட்ஸ் யாரும் அவர்களிடம் பேசுவதில்லை.

இந்நிலையில் தற்போது வந்துள்ள ப்ரோமோவில் யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். “இப்போ ஒருத்தங்க வெளில போய்ட்டாங்க, நம்ம மஹத்துக்காக அந்த இடத்துல நின்னோம், அதனால நம்மக்கிட்ட இப்போ யாரும் பேச மாட்டேங்குறாங்க. நம்ம யாருக்கும் எந்த தப்பும் பண்ணல. நம்ம என்ன பண்ணுனோமோ அது தான் திரும்ப வரும்.

டாஸ்க்ல நீ உன்னோட டீம்ல பெஸ்ட் பெர்ஃபாமர் அவார்ட் வாங்குற, நான் என்னோட டீம்ல பெஸ்ட் பெர்ஃபாமர் அவார்ட் வாங்குறேன். அதான் நம்மளோட கோல்” என ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார் யாஷிகா.

“ஷாரிக்கும் மஹத்தும் நம்ம வின் பண்ணனும்ன்னு தான் நம்மள இங்க விட்டுட்டுப் போயிருக்காங்க, அவங்களுக்காகவாச்சும் நம்ம வின் பண்ணனும்” என்கிறார் ஐஸ்வர்யா.

Sharing is caring!