உலகம் முழுவதும் ரூ.500 கோடிகளை வசூலித்துள்ளது

நடிகர் ரஜினி நடித்த 2.0 படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடிகளை வசூலித்துள்ளதாக படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்த 2.0 படம் நவம்பர் 29 ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இப்படம் ரிலீசான 4 நாட்களில் ரூ.400 கோடியை வசூலித்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று (டிச.,06) ரூ.500 கோடி கிளப்பில் 2.0 இணைந்துள்ளதாக லைகா அறிவித்துள்ளது.

இப்படம் ரிலீசான முதல் வாரத்திலேயே முந்தைய பிரம்மாண்ட படங்களான பாகுபலி, சர்கார் படங்களின் வசூல் சாதனையை முறியடித்திருந்தது. தற்போது 2 வாரத்தின் துவக்கத்தில் இப்படம் ரூ.500 கோடி வசூலை அள்ளி உள்ளது.

Sharing is caring!