உலகம் முழுவதும் ரூ. 640 கோடி வசூல் வேட்டை நடத்திய 2.0 படம்

சென்னை:
உலகம் முழுவதும் 2.0 படம் ரூ. 640 கோடி வசூல் வேட்டை நடத்தி உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

2.0 இந்திய சினிமாவே வியந்து பார்க்கும்படி வசூல் சாதனை செய்து வருகின்றது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் 2.0 உலகம் முழுவதும் நேற்று வரை ரூ 640 கோடி வசூல் செய்துள்ளது, இந்தியாவில் மட்டும் ரூ 500 கோடி வசூல் செய்துள்ளது.

வெளிநாடுகளில் ரூ 140 கோடி வசூல் செய்துள்ளதாம், எப்படியும் இப்படம் ரூ.700 கோடி வரை ஒட்டு மொத்த வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் படம் ரிலீசான பிறகே இப்படம் ரூ.1000 கோடி கிளப்பில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!