உலகையே பரபரபாக்கிய “ஒய் திஸ் கொலவெறி”

இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் ஒரு தமிழ்ப் படப் பாடல் பரபரப்பை ஏற்படுத்தி பல கோடி பேரை முணுமுணுக்க வைத்ததென்றால், அந்தப் பெருமை ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலையே சாரும்.

ஏழு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் அனிருத் இசையமைப்பில், தனுஷ், எழுதி பாடிய 3 படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் ஒரு மேக்கிங் வீடியோ போன்று யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது.

வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாகப் பரவியது. இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் உள்ள இசை ரசிகர்களையும் இந்தப் பாடல் ஈர்த்தது. தமிழ் மொழி தெரியாதவர்கள் கூட அந்தப் பாடலின் இசையை மட்டும் வைத்துக் கொண்டு அவரவர் பாணியில் பல்வேறு வெர்ஷன்களை வெளியிட்டனர்.

இன்று வரை 16 கோடியே 78 லட்சம் பார்வைகளைக் கடந்து யு டியுபில் தமிழ்ப் படப் பாடல்களில் முதலிடத்தை இந்தப் பாடல் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்த ஏழு வருடங்களில் இந்தப் பாடலை மிஞ்ச வேறு ஒரு பாடல் வரவில்லை என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

Sharing is caring!