எடையை குறைத்த சிம்பு

நடிகர் சிம்பு கடந்த சில வருடங்களாகவே, உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘AAA ‘ ‘செக்கச் சிவந்த வானம்’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ ஆகிய படங்களில் இவரின் எடையை சுட்டி காட்டி நெட்டிசன்கள் சிலர் நேரடியாகவே சமூகவலைதளத்தில் விமர்சித்தனர்.

இதற்கு ஏற்றவாறு சிம்பு ரசிகர்களும் பதிலடி கொடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் உடல் எடையை குறைத்து, பிட்டாக மாற வெளிநாடு சென்று கடின உடற்பயிற்சி மற்றும் சிகிச்சை எடுத்தார்.

சிம்புவின் சகோதரர், குறளரசன் திருமணம் இன்று நடைபெற்றது. வரும் 29ஆம் தேதி திருமண வரவேற்பு மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள சென்னை திரும்பியுள்ளார் சிம்பு.

Sharing is caring!